உதடு சிவப்பாக இருக்க வேண்டுமா

Loading...

உதடு சிவப்பாக இருக்க வேண்டுமாஉதடு சிவப்பாக இருக்க வேண்டும் என எல்லா பெண்களும் ஆசைப்படுவார்கள். போடும் உடைகளுக்கும் மேட்சாக பாத்து பாத்து விதவிதமான லிப்ஸ்டிக் வாங்கி வந்து ஆசையா போடுவீங்க. ஆனால் கொஞ்ச வருஷம் கழிச்சு பார்த்தா உங்கள் உதடு கருத்து , வறண்டு போயிருக்கும். இதற்கு காரணம் நீங்கள் ஆசையா வாங்கி போட்ட லிப்ஸ்டிக் தான்.
என்னதான் தரமான லிப்ஸ்டிக் என்றாலும் அதில் பேராபின் கலந்திருப்பார்கள். அது உங்கள் உதட்டினை வறண்டு போகச் செய்யும். மேலும் ஹெமிக்கல் இல்லாத லிப்ஸ்டிக் அரிதுதான். அதுவும் விலை மலிவானது என்றால் இன்னும் மோசமாக இருக்கும்.
இப்போது மார்க்கெட்டுகளில் புதிதாக உதட்டு ஸ்க்ரப் என்று அறிமுகப்படுத்தியியோருக்கிறார்கள். உதட்டிலுள்ள இறந்த செல்களை நீக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. உதட்டு ஸ்க்ரப்பை நாம் வீட்டிலேயே சிறந்த முறையில் தயாரிக்கலாம். பக்க விளைவுகளற்றது.உதட்டினை மிருதுவாக்கும்.

தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப் :
தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப் வறண்ட உதடுகளுக்கு தீர்வினைத் தரும். இது கருமையையும் போக்கும். தேவையானவை :
தேங்காய் எண்ணெய் -1
டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 1
டீஸ்பூன் தேன்- 1/2
ஸ்பூன் சர்க்கரை- 3 டீஸ்பூன்

செய்முறை :

தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாற்றினை கலக்கவும். பிறகு சர்க்கரையை சேர்த்து 5-8 நொடிகள் கலக்கவும். இப்போது இந்த கலவை கரைந்தும் கரையாமலும் சொரசொரப்புடன் இருக்கும்.
இதனை உதட்டில் தடவி மெதுவாய் தேய்க்கவும். 30 நொடி-1 நிமிடம் வரை தேய்க்கலாம். அதன் பின் ஒரு சுத்தமான துணியால் ஒத்தி எடுக்கவும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்தால் உதட்டில் ஏற்பட்ட கருமை அகன்று, மிருதுவான உதடுகள் கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply