உடல் எடையை குறைக்கும் கோப்பி

Loading...

உடல் எடையை குறைக்கும் கோப்பிகோப்பியில் பொதுவாகக் காணப்படும் ரசாயனம் ஒன்று உடல் எடை கூடுவதைத் தடுப்பதுடன், உடல் பருமன் தொடர்பான நோய்களையும் எதிர்ப்பதாக புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. அந்த ரசாயனம் குளோரோஜெனிக் அமிலம் ஆகும். இது இன்சுலின் தடுப்பைக் குறைப்பதோடு, லிவர்களில் கொழுப்பு சேர்வதையும் தடுப்பதாக எலிகளிடத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக இவ்வாய்வில் தெரிய வந்துள்ளது.
குளோரோஜெனிக் அமிலம் அழற்சியையும் குறைப்பதாக இந்த ஆய்வின் தலைவர் யாங்ஜி மா என்பவர் தெரிவித்துள்ளார். உடல்பருமனின் பிரதான விளைவுகள் இரண்டு: உடல் எடை கூடுவது ஒருபுறம் இருந்தாலும், அதிகரிக்கும் இன்சுலின் தடுப்பு மற்றும் லிவரில் கொழுப்பு சேர்வது ஆகிய இரண்டும் மிக முக்கியமான விளைவுகளாகும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply