உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகளை வெளியேற்றும் வெந்நீர்

Loading...

உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகளை வெளியேற்றும் வெந்நீர்உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெந்நீர் குடித்துவந்தால் உடல் எடை குறையும். தண்ணீர் பருகுவதன் நன்மை நமக்குத் தெரியும்.
உடலியல் செயல்பாடுகள் சீராக இருக்க போதுமான தண்ணீர் குடிப்பது அவசியம். அதேபோல, வெந்நீர் பருகுவதும் பல நற்பலன்களை அளிக்கிறது. அவை பற்றிப் பார்ப்போம்…
வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, அஷீரணத்தினால் ஏற்படும் தலைவலி குறையும். உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெந்நீர் குடித்துவந்தால் உடல் எடை குறையும்.
வாயுத் தொல்லை உள்ளவர்கள், சுக்கு கலந்த வெந்நீர் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும். அடிக்கடி தாகம் எடுக்கிறது என்பவர்கள், பச்சைத் தண்ணீருக்குப் பதிலாக வெந்நீர் பருகலாம்.
உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகளையும் வெந்நீர் வெளியேற்றும். கால் வலி உள்ளவர்கள், கால் பொறுக்கும் சூட்டில் ஒரு பாத்திரத்தில் வெந்நீர் விட்டு, அதில் 2 தேக்கரண்டி கல் உப்பை போட்டு கலக்க வேண்டும்.
பின்னர் அதில் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும். மிருதுவான சருமம் பெற, ஒரு தேக்கரண்டி பார்லியில் வெந்நீரை ஊற்றி, அடிக்கடி குடித்து வரலாம்.
விருந்துச் சாப்பாடு சாப்பிட்டவர்கள், ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் எளிதில் செரிமானம் ஆகும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply