உங்கள் முகம் பள பளக்க இதோ குறிப்பு

Loading...

உங்கள் முகம் பள பளக்க இதோ குறிப்பு• வழுக்கை தேங்காயை அரைத்து, அதோடு சிறிது இளநீர் கலந்து முகத்துக்கு கீழிருந்து மேல் புறமாக பூசி, காய்ந்ததும் முகத்தை அலச வேண்டும். தினமும் இப்படி செய்துவந்தால், மாசு மருவின்றி பளிங்குபோல முகம் மிளிரும்.
• தேங்காய் பால் – 2 டீஸ்பூன், கடலை மாவு – 1 டீஸ்பூன் இரண்டையும் கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் போட்டு, காய்ந்த பிறகு முகத்தை கழுவி விடுங்கள். வாரம் இருமுறை இந்த “பேக்” போட்டு வர முகம் பிரகாசமாகும். இந்த “பேக்”கில் கடலை மாவுக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து புருவத்தில் படாமல் முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை அலசுவது இன்னொரு “பளிச்” சிகிச்சை.
• கேரட் சாறு – 1 டீஸ்பூன், தேங்காய் பால் – 1 டீஸ்பூன் இரண்டையும் கலந்து முகத்துக்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் அழகு உங்களை அள்ளிக் கொண்டு போகும்.
• முல்தானிமட்டி – 1 டீஸ்பூன், தேங்காய் பால் – 1 டீஸ்பூன் இரண்டையும் கலந்து முகத்துக்கு “பேக்” போடுங்கள். வாரம் ஒரு முறை இந்த “பேக்” போட்டு வாருங்கள். விரைவிலேயே அழகு மாற்றங்கள் பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணெயை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கி விடும்.
• உருளைக்கிழங்கு ஜூஸ் – 1 டீஸ்பூன்
தேங்காய் பால் – 1 டீஸ்பூன்
பயத்த மாவு – 1 டீஸ்பூன்
மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு “பேக்” போடுங்கள். காய்ந்ததும் அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த “பேக்” போட்டால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.
• மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை… இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, உலர்த்தி, காயவைத்து பவுடராக்குங்கள். இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டுங்கள். பிறகு, அரை கப் தேங்காய்ப் பாலை கொதிக்க வைத்து, அதில் இந்த மூட்டையைப் போட்டுவிடுங்கள்.
பவுடரின் எசென்ஸ் தேங்காய்ப் பாலில் இறங்கி, தைலம் மாதிரி ஆகி விடும். இதைத் தலையில் தடவி மசாஜ் செய்து குளியுங்கள். (சியக்காயோ, ஷாம்புவோ போட வேண்டிய அவசியம் இல்லை). வாரம் ஒரு முறை இந்த வைத்தியம் செய்து வந்தால் பேனும், பொடுகும் பக்கத்திலேயே வராது

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN