இறால் உருளைக்கிழங்கு ஃபிரை

Loading...

இறால் உருளைக்கிழங்கு ஃபிரை

தேவையான பொருட்கள் :

இறால் – 1/2 கிலோ,உருளை கிழங்கு – 2 பெரியது,மிளகாய் தூள் – தேவையான அளவு,
மிளகு தூள் – அரை ஸ்பூன்,கறிவேப்பிலை – சிறிதளவு,மஞ்சள் தூள் – சிறிதளவு,எண்ணெய் – சிறிதளவு,உப்பு – தேவையான அளவு


செய்முறை :

* இறாலை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை தோலை நீக்கி விட்டு சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் இறால், உருளை கிழங்கை போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு கிளறி 1 மணி நேரம் ஊறவிடவும்
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இறால் கலவையை போட்டு நன்றாக 5 நிமிடம் கிளறவும். அடுத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைத்து வேக விடவும். நன்றாக வெந்து பொன்னிரமாக வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.
* இறால் 10 நிமிடத்தில் வெந்து விடும்.
* இறால் உருளை கிழங்கு ஃபிரை ரெடி.

Loading...
Rates : 0
VTST BN