இமோஜி பாஸ்வேர்ட் முயற்சி தோல்வி பெறதாம்

Loading...

இமோஜி பாஸ்வேர்ட் முயற்சி தோல்வி பெறதாம்ஸ்மார்ட்போனில் பெருமளவில் பயன்படுத்தப்படும் இமோஜிகளை பாஸ்வேர்டாக பயன்படுத்தும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது.

இன்றைய இணைய யுகத்தில் இமோஜிகளை கணனி, ஸ்மார்ட்போன் என எல்லா இடங்களிலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஸ்மைலி எனப்படுவதன் மேம்படுத்தப்பட்ட வசதியான இமோஜிகள், கணனி, ஸ்மார்ட்போன் உரையாடலின் போது அனைவராலும் பொதுவாக பயன்படுத்தப்படுவது.

சிரிப்பது போலவும், கோபமாக இருப்பது போலவும் என அனைத்து விதமான உணர்வுகளுக்கும், அதுமட்டுமல்லாது இன்னும் பல விடயங்களை எளிதாக விளக்கும் விதத்திலும் இமோஜிகள் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், இனி வரும் காலங்களில், பாஸ்வேர்டிலும் இமோஜிகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த இண்டெலிஜெண்ட் என்விரான்மெண்ட்ஸ் எனும் நிறுவனம் வங்கி சேவைக்குப் பயன்படுத்தும் பாஸ்கோடுகளில் எண்களுக்குப் பதிலாக இமோஜி எழுத்துக்களைப் பயன்படுத்தும் யோசனையை தற்போது முன்வைத்துள்ளது.

இதை வங்கிகள் ஏற்றுக்கொண்டால் இமோஜிகளைக் கொண்டே பாஸ்வேர்டை உருவாக்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நிறுவனம் இது பற்றி கூறுகையில், 44 இமோஜி எழுத்துக்களைக் கொண்டு எண்ணற்ற விதங்களில் பாஸ்வேர்டை உருவாக்கிக்கொள்ளலாம்.

மேலும், இவற்றைக் கண்டுபிடிப்பதோ களவாடுவதோ ஹேக்கர்களுக்கு இயலாத காரியமாக இருக்கும் என்று சொல்கிறது.

இந்த முயற்சி வெற்றி பெற்றால் அனைத்து இடங்களிலும் பாஸ்வேர்டாக இமோஜிகள் பயன்படுத்தப்படலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply