இந்திய சினிமாவே எதிர்ப்பார்க்கும் …சிறப்பு முன்னோட்டம்

Loading...

கபாலி தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே எதிர்நோக்கி காத்திருக்கும் படம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பார்க்ககூடிய வகையில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.


இதனாலேயே இப்படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு மட்டுமின்றி பல திரையரங்குகள் இப்படத்திற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளது, கிட்டத்தட்ட உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளுக்கு மேல் ஜுலை 22ம் தேதி கபாலி ரிலிஸாகவுள்ளது.


இப்படத்தில் ரஜினி கேங்ஸ்டர் என்பது பலரும் அறிந்ததே, இப்படம் சென்ஸார் சென்ற போது சுமார் 10 காட்சிகள் வரை கட் விழுந்ததாக கிசுகிசுக்கப்படுகின்றது.


மேலும், ரஜினியின் அறிமுக காட்சியிலேயே நெருப்புடா பாடல் இடம்பெறும் என கூறியுள்ளனர், இது மட்டுமின்றி படத்திற்கு நெகட்டிவ் கிளைமேக்ஸ் என்று ஒரு செய்தி உலா வருகின்றது.


ஆனால், இந்த காட்சி தான் படத்தின் மொத்தக்கதைக்கும் மிக முக்கியமாக இருக்கும் என்பதால் ரஜினியே விரும்பி வைக்க சொன்ன காட்சியாம், கபாலி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மட்டுமின்றி மலாய், தாய் ஆகிய மொழிகளில் டப் செய்து ரிலிஸாகவுள்ளது.படத்தின் வெற்றியை பொறுத்து சைனிஸ், ஜப்பனீஸ் மொழிகளிலும் வெளிவரவிருக்கின்றதாம், ரஜினி படம் ரிலிஸ் என்றால் சாதரண நாள் கூட திருவிழா தான், திருவிழா தொடங்க இன்னும் 3 நாட்கள் இருக்க இதோ ஸ்பெஷல் கபாலி வீடியோ உங்களுக்காக…

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply