இதயத்திற்கு இதம் வேண்டுமா இதைப்படிங்க

Loading...

இதயத்திற்கு இதம் வேண்டுமா இதைப்படிங்கஉலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் இதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாறிவரும் உணவுப்பழக்கமும், வேலைப்பளுவினால் ஏற்படும் மனஅழுத்தமும்தான் இதயநோய்கள் ஏற்பட காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே முறையான உணவுப்பழக்கத்தை மேற்கொண்டால் இதயநோய்களை தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் இதயத்திற்கு இதம் தரக்கூடியவை. எனவே கோதுமை பிரட், தானியங்கள், பச்சை காய்கறிகள், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்றவைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சிட்ரஸ் பழங்கள், பார்லி, ஓட்ஸ், போன்றவைகளை உண்பதன் மூலம் உடம்பில் கெட்ட கொழுப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்புகள் படிவதில்லை. இதயநோய்கள் ஏற்படுவதில்லை.

வைட்டமின் பி அதிகமுள்ள உணவுகளை உண்பதன் மூலம் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கப்படுகிறது. பச்சை இலைக்காய்கறிகள், ஆரஞ்சு பழம் போன்றவைகளில் பி வைட்டமின் உள்ளது இவற்றில் அன்றாட உணவுகளில் உட்கொள்வதன் மூலம் இதயநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

ஒமேகா 3 அதிகம் உள்ள மீன், வால்நட், சோயாபீன்ஸ் போன்றவை உண்பவர்கள் இதயநோயைப்பற்றி கவலையே படத்தேவையில்லை. ஏனெனில் இதயநோய்களை தடுப்பதில் ஒமேக 3 உணவுகளுக்கு முக்கிய பங்குண்டு.

அதேபோல் பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, போன்ற உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக அடர் பச்சை நிற கீரைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். உப்பு, இதயத்துக்கு எதிரானது. எனவே உணவில் அதிகம் உப்பு சேர்த்துக்கொள்பவராக இருந்தால் இதயத்தை எண்ணி கொஞ்சம் உப்பை குறைத்துக்கொள்வது நல்லது.

மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால் இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply