இணையத்துக்காக செலவிடும் பணத்தினை மீதப்படுத்த இதோ டிப்ஸ்

Loading...

இணையத்துக்காக செலவிடும் பணத்தினை மீதப்படுத்த இதோ டிப்ஸ்இன்றைய தொழில்நுட்ப உலகில் கணினி, இணையம், Smart சாதனங்கள் போன்றன தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டன. ஆரம்பத்தில் பத்திரிகைகள் மூலம் அறிந்து கொண்ட தகவல்களை இன்று நாம் பத்திரிகைகளுக்கு அவைகள் செல்லும் முன்னரே அறிந்து கொள்கின்றோம்.

இதற்கு Facebook, Google Plus போன்ற சமூக வலைதளங்களும் இணையத்தின் ஊடான இலத்திரனியல் பத்திரிகைகள் உட்பட இன்னும் ஏராளமான பல இணையதளங்களும் வழிவகுத்துள்ளன என்றால் மறுப்பதற்கில்லை.
Anchor

அந்த வகையில் ஒவ்வொரு தனி நபர்களும் நிறுவனங்களும் மிகவேகமாகவும் துல்லியமாகவும் தகவல்களை அறிந்துகொள்ள இணையமானது முக்கியமானதொரு மூலாதாரமாக அமைந்துள்ளது.

எனவே இன்று வீட்டுக்கு வீடும் நிறுவனங்களுக்கு நிறுவனமும் கணினி, இணையம் போன்றவைகள் ஒரு அங்கமாக வைக்கப்பட்டுள்ளது.

நாம் கணினியை பயன்படுத்தி இணையத்தின் ஊடாக தகவல்களை பெறுவதற்கு இணைய உலாவி என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். இன்றைய உலகில் அதிகமானவர்களால் விரும்பிப் பயன்படுத்தப்படும் இணைய உலாவிகளுள் Google Chrome இணைய உலாவி முதன்மையான ஒன்றாகும்.

இந்த உலாவியை பயன்படுத்தி நாம் இணையத்தினை உலா வருகையில் எமது தரவுப்பாவனையை சிக்கனப்படுத்தி நாம் இணையத்துக்காக செலவினை மீதப்படுத்தி தருகின்றது Data Saver எனும் Google Chrome இணைய உலாவிக்கான நீட்சி.

Google நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இந்த நீட்சியை பின்வரும் இணைப்பு மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம்.

● இதனை Google Chrome இணைய உலாவிக்கு நிறுவிய பின் இதனை குறிப்பிட்ட இணைய உலாவியின் வலது மேல் மூலையில் அவதானிக்கலாம்.

● பின் நீங்கள் இணையத்துக்கு செல்லும் ஒவ்வொரு தடவையும் உங்கள் இணைய உலாவலுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் உங்கள் தரவுப்பாவனையை சிக்கனப்படுத்த ஆரம்பிக்கும்.

● இனி குறிப்பிட்ட நீட்சியை சுட்டுவதன் மூலம் எந்த அளவு தரவுப்பாவனை சிக்கனப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை அறிந்துகொள்ள முடியும்.

மேலும் இதனையும் பார்க்க: நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் படிக்கப்பட்டு விட்டதா? என்பதனை அறிய உதவும் Google இணைய உலாவிக்கான நீட்சி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply