ஆப்பிள் ஐஸ்கிரீம் | Tamil Serial Today Org

ஆப்பிள் ஐஸ்கிரீம்

Loading...

ஆப்பிள் ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள்:

தோல் சீவி, விதை நீக்கிய பெரிய ஆப்பிள் பழம் – 2
சர்க்கரை – 4 மேஜைக்கரண்டி
பால்பவுடர் – 4 மேஜைக்கரண்டி
மில்க் கிரீம் – 1 கப்
பால் – 1 கப்
கிராம்பு – சிறிதளவு (பொடியாக்கப்பட்டது)
முந்திரி – 8


செய்முறை

மேலே சொல்லப்பட்ட ஆப்பிள் பழத்தையும், சர்க்கரையையும், பால் பவுடரையும், மில்க் கிரீமையும், பாலையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து-முட்டையை அடிப்பது போல் அடித்துக் கொள்ள வேண்டும். அத்துடன் கிராம்புத் தூளையும், முந்திரிப் பருப்பையும் கூடச் சேர்த்துக் கொள்ளவும்.
ஒன்றில் ஒன்று நன்றாக இவை கலந்தவுடன் இதனை ஐஸ் ஆகக்கூடிய ட்ரேக்களில் ஊற்றி, அதனை அப்படியே பிரிட்ஜில் வைத்து விடவும். இரண்டு மணி நேரம் கழித்து இதனை வெளியில் எடுத்து விடவும். மிகவும் சுவையாக இருக்கும்.

Loading...
Rates : 0
VTST BN