ஆண்ட்ராய்டு பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்

Loading...

ஆண்ட்ராய்டு பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும்உலகின் மொத்த மொபைல் சந்தையில் அதிகபட்சமாக 81% ஆண்ட்ராய்டு கருவிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. அப்படிபட்ட ஆண்ட்ராய்டு கருவிகளில் பிரச்சனை ஏற்படுவது மிகவும் சாதாரண விஷயம் தான்.

பிரச்சனைகள் இல்லாத இடமே இல்லை என்று கூறும் அளவு எங்கும் பிரச்சனை எதிலும் பிரச்சனை தான்.

இது போன்ற சூழலில் புதிதாக வாங்கும் கருவிகளிலும் பிரச்சனைகள் தொடர்ந்தால் எப்படி இருக்கும். ‘செம கடுப்பாகும்’ என்ற உங்களது மைன்டு வாய்ஸ் கேட்க தான் செய்கின்றது, என்ன செய்ய எல்லா பிரச்சனைகளையும் கடக்க தான் வேண்டும்.

வாழ்க்கையில் பிரச்சனைகளை எப்படி தீர்த்து கொள்ள வேண்டும் என உங்களுக்கு தெரியும் ஆனால் ஆண்ட்ராய்டு கருவிகளில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என தெரியுமா, இங்கு தெரிந்து கொள்ளுங்கள்…


ஹேங் :

ஆண்ட்ராய்டு கருவி திடீரென ஹேங் ஆனால் அதனினை உடனடியாக ரீஸ்டார்ட் செய்யலாம்.


வை-பை :

சில சமயங்களில் வை-பை சரியாக கனெக்ட் ஆகவில்லை என்றால் போனின் வை-பை– செட்டிங்ஸ்–மெனு–அட்வான்ஸ்டு ஆப்ஷனில் ஸ்டே கனெக்டெடு டூ வை-பை டியுரிங் ஸ்லீப் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.


மெமரி :

போனில் அவ்வப்போது மெமரியில் பிரச்சனை ஏற்பட்டால் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கேச்சி க்ளீனர் அப்ளிகேஷனினை இன்ஸ்டால் செய்யலாம், இந்த செயலி முடிந்த வரை இந்த பிரச்சனை சரி செய்து விடும்.


எஸ்டி கார்டு :

சில சமயங்களில் போனில் எஸ்டி கார்டு வேலை செய்யாமல் போகலாம், இது போன்ற நேரங்களில் மெமரி கார்டினை கணினி அல்லது லேப்டாப் கருவிகளில் போட்டு ஃபார்மட் செய்யலாம்.


ப்ரைட்னஸ் :

அதிகபடியான சூரிய வெளிச்சத்தில் ஸ்கிரீனினை பார்ப்பது கடினமாக இருந்தால் ஸ்கிரீான் ப்ரைட்னஸை அதிகமாக வைத்து, ஆன்டி க்ளேர் ஸ்கிரீன் கார்டு போடலாம்.


செயலி :

தேவையில்லாத செயலிகளை அன்இன்ஸ்டால் செய்ய செட்டிங்ஸ்–அப்ளிகேஷன்–மேனேஜ் அப்ளிகேஷன்ஸ் சென்று உங்களது தேவையில்லாத செயலிகளை அன் இன்ஸ்டால் செய்யலாம்.


ஸ்கிரீன் :

ஸ்கிரீன் உடைந்து போனால் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்களில் கிடைக்கும் மாற்று ஸ்கிரீனினை மாற்றி கொள்ளலாம், இது போன்று செய்யும் போது அதிக கவனத்தோடு ஆய்வு செய்வது அவசியமாகும்.


பாஸ்வேர்டு :

ஆண்ட்ராய்டு கருவியில் பாஸ்வேர்டு என்டர் செய்வது காலதாமதமாகின்றதா, செட்டிங்ஸ்–செக்யூரிட்டி– செட் அப் ஸ்கிரீன் லாக்– பேட்டர்ன் பாஸ்வேர்டு ஆப்ஷனை க்ளிக் செய்து கொள்ளலாம். இவை அதிக நேரம் எடுத்து கொள்ளாது.


இடம் :

மேப்ஸ்களில் உங்களது இடம் தவறாக இருந்தால் செட்டிங்ஸ்–லோகேஷன்–யூஸ் ஜிபிஸ் சாட்டிலைட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யலாம்.


ஃபார்மட் :

ஆண்ட்ராய்டு கருவியை முழுமையாக ஃபார்மட் செய்ய செட்டிங்ஸ்–எஸ்டி&போன் ஸ்டோரேஜ்– பேக்ட்ரி டேட்டா ரீஸ்டோர் ஆப்ஷனை க்ளிக் செய்தால் போதும். போனில் எதுவும் இருக்காது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply