அழகாக ஆலோசனைகள்

Loading...

அழகாக ஆலோசனைகள்…இயற்கை பெண்களுக்கு வழங்கிய ஓர் வரப்பிரசாதம் அழகு. இது இறைவன் கொடுத்த வரம். அழகு என்பது தெய்வத் தன்மை வாய்ந்தது. மங்களகரமானது. அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாதவள் பெண்ணே கிடையாது. ஒவ்வொரு பெண்ணும் தான் அழகியா, அழகற்றவளா என்று பார்ப்பதில்லை. எப்படியாவது தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டாவது அழகாக வாழ வேண்டும் என்று விரும்புகிறாள்.
எல்லா வகையான உணவிலும் ஏதாவது ஒரு சுவை கலந்திருப்பதைப் போல எல்லோரும் ஏதாவது ஒரு வகையில் அழகாகவே இருக்கிறார்கள். அழகு என்பது பொதுச் சொத்து. அதில் சிலர் மிகுந்த வனப்புடையவர்களாக விளங்குவார்கள். பலர் குறைந்த வனப்புடையவர்களாக விளங்குவார்கள் அவ்வளவுதான்.


ஒரு பெண் அழகாக இல்லாமலிருப்பதற்கும் அல்லது அழகு குறைந்து போவதற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை கீழ்க்கண்ட விதமாக குறிப்பிடலாம்.

அதிகப்படியான வேலைப்பளு
திட்டமிடப்படாத உணவு முறை
கட்டுப்பாடற்ற செயல்கள்
சோம்பல்
பகல் தூக்கம்
பிரசவம்
குழந்தைகளால் ஏற்படக்கூடிய கவலைகள்
எதிர்கால அச்சம்
நோய்கள்
தான் அழகாக இல்லையே என்ற கவலை
இப்படி பல்வேறு காரணங்களை ஒரு பெண்ணின் அழகைக் குறைக்க போதுமானவை என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.
அதுபோல நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக திகழும் உடம்பே சிறந்த அழகுடையது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இவ்வுண்மையை ஏற்றுக் கொண்டால் அதில் முதலாவது அறிந்து கொள்ள வேண்டியது சரும பாதுகாப்பு.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply