அப்பிளின் iPhone இற்கு வயது 8

Loading...

அப்பிளின் iPhone இற்கு வயது 8அப்பிள் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட iPhone ஆனது 2007 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 29 ஆம் திகதி முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

நோக்கியா மற்றும் பிளாக்பெரி கைப்பேசிகள் பிரபல்யம் பெற்றிருந்த காலப்பகுதியிலேயே இந்த iPhone அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

iPhone அறிமுகமானது ஸ்மார்ட் கைப்பேசி உலகில் புதிய புரட்சியாக பார்க்கப்பட்டிருந்ததுடன் பல மாற்றங்களையும் ஏற்படுத்தியது.

இன்று பிரபல்யம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசியாகக் காணப்படும் iPhone ஆனது பல மாற்றங்களைக் கண்டு 8 ஆண்டுகளையும் எட்டியுள்ளது.

இதே நேரம் இறுதியாக கடந்த வருடம் iPhone 6S மற்றும் iPhone 6S Plus ஆகிய மொடல்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், இவ்வருடம் iPhone 7 அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply