அப்பிளின் அப்பிளிக்கேஷனை அதிரடியாக தடை செய்த சீனா | Tamil Serial Today Org

அப்பிளின் அப்பிளிக்கேஷனை அதிரடியாக தடை செய்த சீனா

Loading...

அப்பிளின் அப்பிளிக்கேஷனை அதிரடியாக தடை செய்த சீனாஅப்பிள் நிறுவனமானது மொபைல் சாதனங்களுக்கான புதிய இயங்குதளமான iOS 9 இனை அண்மையில் அறிமுகம் செய்திருந்தமை அனைவரும் அறிந்ததே.

இப்புதிய இயங்குதளத்துடன் Apple News எனும் அப்பிளிக்கேஷனையும் அந் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

இக்குறித்த அப்பிளிக்கேஷனானது சீனாவில் பயன்படுத்த முடியாத அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது அதனைப் பயன்படுத்துபவர்களின் இருப்பிடங்களை அறிந்தே அதற்கு ஏற்றவகையில் தகவல்களை வழங்குகின்றது. இக்காரணத்தை முதன்மைப்படுத்தியே சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இதற்கான சரியான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில் அப்பிள் நிறுவனமும் இது தொடர்பாக எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Rates : 0
ads
VTST BN