அதிமெதுவான இன்டர்நெட் கனெக்சனால் டென்ஷனா வந்துவிட்டது பேஸ்புக் லைட்

Loading...

அதிமெதுவான இன்டர்நெட் கனெக்சனால் டென்ஷனா வந்துவிட்டது பேஸ்புக் லைட்பேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தை பதிவேற்ற 1 மணி நேரம் ஆகும் கொடுமையைப் போல் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. இப்படிச் சொல்லும் ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்களின் மனதை துல்லியமாகப் புரிந்து கொண்ட பேஸ்புக் புது அப்ளிகேஷன்(ஆப்) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

மெதுவான இன்டர்நெட் கனெக்சன் கொண்டவர்கள், செல்போனில் குறைவான மெமரி உள்ளவர்கள், 2 ஜி இணைப்பு வைத்திருப்பவர்கள் என்று பலதரப்பட்டவர்கள் இந்த புதிய ஆப் மூலம் பேஸ்புக்கை எளிமையாகவும், துரிதமாகவும் உபயோகிக்கலாம்.இந்த அப்ளிகேஷன் 1 எம்பிக்கும் குறைவான இடத்தை தான் எடுக்கும்.

மெதுவான இண்டர்நெட் கனெக்சன் இருந்தாலும் வேலை செய்யும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நியூஸ் பீட், ஸ்டேடஸ் அப்டேட், புகைப்படங்கள், நோட்டிபிகேஷன் ஆகியவற்றைப் பார்க்க முடியும். அதேநேரம் வீடியோக்களை பார்க்க முடியாது.

இந்த அப்ளிகேஷன் முதலில் ஆசியாவில் சில நாடுகளில் வெளிவந்த பின்னர் அமெரிக்கா , ஆப்ரிக்கா,ஐரோப்பா ஆகிய நாடுகளில் வெளிவரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply