அசிடிட்டியால் கவலையா இனி கவலை வேண்டாம்

Loading...

அசிடிட்டியால் கவலையா  இனி கவலை வேண்டாம்வயிற்றில் சாதாரணமாகவே அமிலம் சுரக்கும். இவை உணவு செரித்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமிலம், செரித்தல் நிகழ்வின் போது உணவுப் பொருட்களை சிதைக்கப் பயன்படுகின்றன.
வயிற்றில் அமிலம் அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது ஏற்படும் சூழ்நிலையே “அசிடிட்டி’ எனப்படும்.

அறிகுறிகள்


நெஞ்செரிச்சல்:

வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவதால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

அஜீரணம்:

வயிற்றின் மேல் பகுதியில் எரிவது அல்லது வலிப்பது போன்ற உணர்வு; சில நேரங்களில் குடல் பகுதியில் குத்துவது போன்ற உணர்வு ஏற்படும். அரிதாக சிலருக்கு எவ்வித வலியும் இருக்காது. ஆனால், வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, வயிறு ஊதல் மற்றும் வயிற்றுப் பொருமல் போன்றவை ஏற்படும்.
அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபட உணவு முறையில் சிறியளவில் மாற்றம் செய்து கொண்டாலே போதும்.
* சத்துள்ள பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவில் சாப்பிட வேண்டும். அப்போது உடலிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் முழு அளவில் கிடைக்கும்.
* பப்பாளி மற்றும் அன்னாசி போன்ற பழங்களில் உணவு செரிமானத்திற்கு உதவும் பாப்பெயின் மற்றும் “புரோமிலெய்ன்’ ஆகிய என்சைம்கள் அதிகளவில் உள்ளன. எனவே, இப்பழங்களை அதிகளவில் சாப்பிடலாம்.
* சீரகம், புதினா, சோம்பு ஆகியவற்றுக்கு, ஜீரண சக்தியை அதிகரித்தல், வாயு தொல்லை மற்றும் வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் தன்மை உண்டு. எனவே, இவற்றை தினசரி சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது.
* முட்டைகோசு சாறு நெஞ்செரிச்சலுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பாதைக்கு மிகவும் பயன்படும் குளூட்டாமின் எனும் அமினோ அமிலம் முட்டைகோசில் அதிகளவில் காணப்படுகிறது. முட்டைகோசு சாறை தனியே சாப்பிட முடியாவிட்டால் மற்ற காய்கறிகளின் சாறுடன் கலந்து சாப்பிடலாம்.
* சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இஞ்சி டீ குடிக்கலாம்.
இவை செரிமானத்திற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டி விடுகிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply