Lenovo அறிமுகம் செய்யும் புதிய கைப்பேசி

Loading...

ஒரு பெண் கர்ப்பம் அடைவதற்கான ஏற்ற வயதுஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுடன் போட்டிபோட்டு சிறந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவரும் Lenovo நிறுவனம், A3900 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இக்கைப்பேசியானது 5 அங்குல அளவுடையதும், 854 x 480 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய MediaTek MT6752 Processor , பிரதான நினைவகமாக 512MB RAM மற்றும் 4GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது.

மேலும் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவற்றுடன் 2,300 mAh மின்கலத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

Android 4.4.4 KitKat இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக்கைப்பேசியின் விலையானது 100 டொலர்கள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply