FilmFare விருது விழாவில் ரசிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றங்கள்

Loading...

FilmFare விருது விழாவில் ரசிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றங்கள்

தமிழ் சினிமாவை கௌரவிக்கும் பொருட்டு வருடா வருடம் பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. 63 வருட பிலிம்பேர் விருதுகள் நேற்று மாலை ஐதராபாத்தில் நடந்தது. இதில் தென்னிந்தியாவை சார்ந்த பல நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்.


எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் பிரமாண்டமாக கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்க, முதலில் பாடலாசரியர்கள், பாடகர்கள் விருது அறிவிக்கப்பட்டது, இதில் முதல் விருது ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ பாடலுக்காக மதன் கார்க்கிக்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.பலரும் ‘உனக்கென்ன வேனும் சொல்லு’ பாடலுக்காக தாமரை அவர்களுக்கு கிடைக்கும் என்றே எதிர்ப்பார்த்தார்கள், இதனால் ஆரம்பமே ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்துடன் தொடங்கியது.அதை தொடர்ந்து சிறந்த இசையமைப்பாளர் விருது ஏ.ஆர்.ரகுமானுக்கு ஐ படத்திற்காக கிடைத்தது, ரகுமானுக்கு விருது கிடைத்தது அனைவருக்கும் சந்தோஷம் தான், ஆனால், பலரும் ஓகேகண்மணிக்காக விருது கிடைத்திருக்கலாம், எதற்கு ஐ படத்திற்கு? என கேள்வி எழுப்பினர்.இதை தொடர்ந்து தெலுங்கில் சர்ச்சை எழுந்தது, எல்லோரும் குணச்சித்திர நடிகராக கட்டப்பா சத்யராஜ் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்ப்பார்த்தனர், ஆனால், இந்த அல்லு அர்ஜுன் கிடைத்தது ரசிகர்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றம்.

மலையாளத்தில் ப்ரேமம் படத்திற்கு விருது இல்லாதது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.மேலும் சிறந்த நடிகர் பிரபாஸிற்கு கிடைக்கும் என்று நினைத்த தருணத்தில் மகேஷ்பாபுவிற்கு கிடைத்தது மிகப்பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியது. இதுமட்டுமின்றி தமிழில் காக்காமுட்டை படத்திற்காக சிறந்த நடிகை விருது ஐஸ்வர்யாக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்த்தனர், ஜுரி விருது கூட இவருக்கு கொடுக்காதது ரசிகர்களுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.விழாவில் மிகப்பெரும் ஆறுதலாக அமைந்த ஒரே விஷயம் தனி ஒருவன் படத்திற்காக மோகன் ராஜா, அரவிந்தசாமி மற்று ஐ படத்திற்காக விக்ரமிற்கு விருது கிடைத்தது தான், இதை மட்டும் தான் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply