60 செக்கன்களில் பிரிண்ட் செய்யக்கூடிய கையடக்கமான போட்டோ பிரிண்டர் அறிமுகம்

Loading...

60 செக்கன்களில் பிரிண்ட் செய்யக்கூடிய கையடக்கமான போட்டோ பிரிண்டர் அறிமுகம்iOS மற்றும் Android சாதனங்களின் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை உடனுக்குடன் பிரிண்ட் எடுத்துக்கொள்ள உதவும் கையடக்கமான வயர்லெஸ் பிரிண்டர் அறிமுகமாகின்றது.

LifePrint எனப்படும் இச்சாதனம் தற்போது மேம்படுத்தல்களுக்கான நிதியினைத் திரட்டும்பொருட்டு Kickstarter தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியதாக காணப்படும் இச்சானத்தில் இணைக்கப்பட்டுள்ள மின்கலத்தினை ஒரு முறை சார்ஜ் செய்து அதன் மூலம் 30 புகைப்படங்களை பிரிண்ட் எடுக்கக்கூடியதாக காணப்படுகின்றது.

மேலும் இதில் காணப்படும் WiFi வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் மூலம் 60 செக்கன்களில் பிரிண்ட் செய்யக்கூடியதாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply