6 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் ஸ்மார்ட்போன்

Loading...

6 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் ஸ்மார்ட்போன்6 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள ஸ்மார்ட்போனை லம்போர்கினி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

டோனினோ லம்போர்கினி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செல்போனின் புறப்பகுதி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், தோலால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆடம் பரமான விலை உயர்ந்த செல் போன்களை மட்டும் விற்பனை செய்து வரும் இத்தாலியைச் சேர்ந்த லம்போர்கினி நிறுவனத்தில் மிகக் குறைந்த விலை செல்போன் இது.

லம்போர்கினி ஆடம்பர செல்போன்களில் விலை குறைந்த தயாரிப்பு இது என்பதால் இதற்கான தேவை அதிகம் இருக்கும். எனினும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்த செல்போன்களை தயாரிக்க லம்போர்கினி முடிவு செய்துள்ளது.

5 அங்குல எச்.டி. திரை, 20 மெகா பிக்செல் கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த செல்போன் முழுவதும் கையினால் வடிவமைக்கப்பட்டது. கருப்பு, தங்கம், வெள்ளி நிறம் என மொத்தம் 5 வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply