1.3 லட்சம் கோடிக்கு வாட்ஸ் அப்-ஐ வாங்குகிறது பேஸ்புக்

Loading...

1.3 லட்சம் கோடிக்கு வாட்ஸ் அப்-ஐ வாங்குகிறது பேஸ்புக்செல்போன் தகவல் பரிமாற்ற சேவை அளிக்கும் வாட்ஸ்அப் நிறுவனத்தை முன்னணி சமூக இணைய தளமான ஃபேஸ்புக் வாங்குகிறது.

அதன்படி, வாட்ஸ்அப்-ஐ சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஃபேஸ்புக் ஒப்பந்தம் செய்துள்ளது. அதோடு ஃபேஸ்புக் தனது இயக்குனர் வாரியத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜான் கோமை இடம்பெறச் செய்துள்ளது.

வாட்ஸ்அப்-ஐ வாங்கும் விருப்பத்தை கடந்த பிப்ரவரி மாதத்திலேயே ஃபேஸ்புக் அறிவித்திருந்தது. அதன்பிறகு, இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி விலையை முடிவு செய்யும் நடைமுறை இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

ஃபேஸ்புக் ஏற்கனவே உலகம் முழுவதும் பிரபலமான சமூக இணைய தளமாக உள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாட்ஸ்அப் வேகமாக வரவேற்பை பெற்று வருகிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply