மைக்ரோசொப்ட் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 29 வீதமாக அதிகரிப்பு

Loading...

மைக்ரோசொப்ட் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 29 வீதமாக அதிகரிப்புஅண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்கள் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தில் பணியாற்றுவோரில் மொத்த பெண் ஊழியர்கள் இதுவரை 24% ஆக இருந்தனர்.

அண்மையில் இது 29% ஆக உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன் இயக்குநர் குழுவில் பெண்கள் இதுவரை 33% ஆக இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 40% ஆக உயர்ந்துள்ளது.

ஆனால், பெண்களில் தொழில் நுட்ப வல்லுநர் எண்ணிக்கை 17.5% ஆக மட்டுமே உள்ளது. மொத்த ஊழியர் எண்ணிக்கையில், 28.9% பேர் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கர்கள் மற்றும் அங்கு வாழும் கருப்பு இனத்தவர் மொத்தம் 3.5% ஆக உள்ளனர்.

அதிக எண்ணிக்கையில் 60.6% ஆக உள்ளவர்கள் ஐரோப்பியர்கள். இதனுடன் ஒப்பிடுகையில், கூகுள் நிறுவனத்தில் 30% பேர் பெண்கள். ஐரோப்பியர்கள் 61% பேர்.

Loading...
Rates : 0
VTST BN