குழந்தை பிறப்பை தள்ளிப்போடக்கூடாது

Loading...

குழந்தை பிறப்பை தள்ளிப்போடக்கூடாதுஇருபதுகளின் ஆரம்பத்தில் மிக எளிதாக இயற்கையாக கருவுருதல் நிகழ்கிறது. முப்பது வயதை நெருங்குதல் அல்லது அதற்கு மேலும் தள்ளிப் போகும்போது சற்று கடினமாகிறது. தற்போது திருமணத்தைத் தள்ளிப் போடுவது என்பது சாதாரணமாகிவிட்டது, ஆனால் இருபதுகளின் ஆரம்பத்தில் திருமணம் என்பது நல்லது.

அதே போல் மணமான முதல் ஆறு மாதங்களில் இருக்கும் கருவுறுதலுக்கான வாய்ப்பு பின்னர் படிப்படியாக குறைகிறது. என்வே திருமணத்தையும் குழந்தைப் பிறப்பையும் அதிகமாக தள்ளிப் போடாமல் இருப்பது நலம்.

மாதவிடாய் ஒழுங்காக வரும் பெண்களுக்கு அது வந்த எட்டாம் நாள் முதல் பன்னிரெண்டாம் நாள் வரை கருவுறுதலுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால், இது ஒவ்வொருவருக்கும் சிறிது மாறுபடும்.

கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ள நாட்களை உடலில் ஏற்படும் சில மாறுதல்கள் மூலம் ஓரளவு கணிக்க முடியும். அந்த நாட்களில் கருப்பை வாயிலிருந்து வெளிப்படும் சளி திரவம், அடி வயிற்றில் ஏற்படும் மிதமான வலி, உடல் வெப்ப நிலை சிறிது அதிகரித்தல், அதிகரிக்கும் உணர்ச்சி ஆகிய அறிகுறிகளின் மூலம் ஓரளவு உணரலாம்.

பெண்கள் வாழ்வின் அன்றாட பழக்கவழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் நேர்த்தியாக வைத்திருப்பது நல்லது.

சத்து மிகுந்த, இயற்கையாக, நம் சூழலுக்கு ஏற்ப நம்முடைய இடத்தில் விளையும் காய்கனிகளை விரும்பி உண்பது நல்லது. நம்முடைய இடத்தில் விளையும் பொருட்களில் இயல்பாகவே நமக்குத் தேவையான சத்துக்கள் மிகுந்து இருக்கும்.

கடல் சார்ந்த உணவுகளை மிக அதிகமாக உண்பது நல்லதல்ல.

இன்றைய நவ நாகரிக உலகில் சிற்சில இடங்களில் இருக்கும் புகை, மது போன்ற பழக்கங்கள் கருவுறுதலை வெகுவாக பாதிக்கிறது. ஆகவே, இம்மாதிரியான பழக்கங்கள் உள்ளவர்கள் அவற்றை விட்டுவிட்டால் குழந்தைப்பேற்றை எளிதில் அடையலாம்.

Loading...
Rates : 0
VTST BN