ஸ்வீட் கார்ன் அவல் போஹா

Loading...

ஸ்வீட் கார்ன்  அவல் போஹா
தேவையானவை:
வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துக்கள், அவல் – தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – அரை கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைப் பழம் – அரை மூடி (சாறு எடுக்கவும்), மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, சர்க்கரை – ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (விழுதாக அரைக்கவும்), உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:
கடுகு, கறிவேப்பிலை, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:
அவலை நன்றாக நீரில் அலசிவிட்டு, நீரை வடிய விட்டு வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்க்கவும். இதனுடன் நீர் வடித்த அவல் சேர்த்து கிளறி, வேகவைத்த சோள முத்துக்களை போட்டு வதக் கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). இதில் மஞ்சள்தூள், சர்க்கரை, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி, சிறிது நேரம் வேகவிடவும். கடைசியாக தேங்காய்ப்பால் விட்டுக் கிளறி அடுப்பை அணைக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply