ஸ்பெஷல் வடை

Loading...

ஸ்பெஷல் வடை
தேவையானவை:
துவரம்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – கால் கப், பச்சரிசி – 25 கிராம், முழு உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 10, காய்ந்த மிளகாய் – 5, தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை – சிறிதளவு, இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு (தோல் சீவவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு, அரிசி, முழு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அலசி, ஒன்றுசேர்த்து நீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்து, தோல் சீவிய இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிசைந்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply