ஷாகி பன்னீர்

Loading...

ஷாகி பன்னீர்

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 200 கிராம்
வெண்ணை – 8 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 டீ ஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீ ஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீ ஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 6
பாதாம் பருப்பு – 6
பால் – 1 கப்
குங்குமப்பூ – 1 சிட்டிகை
உப்பு – 1 டீ ஸ்பூன்



வறுத்து அரைக்க:

ஏலக்காய் – 2
கிராம்பு – 2
பட்டை – 1 சிறு துண்டு
ஷாகி ஜீரா – 1 டீ ஸ்பூன்



அலங்கரிக்க:

நெய் – 1 டீ ஸ்பூன்
உலர் திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்
பிரஷ் கிரீம் – 2 டேபிள் ஸ்பூன்
துருவிய சீஸ் – 1 டேபிள் ஸ்பூன்



செய்முறை:

* பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிட்டு ஆறியதும் தோலை உரிக்கவும்.

* முந்திரிப் பருப்புகள், தோலுரித்த பாதாம் பருப்புகள் இரண்டையும் சிறிது பாலில் ஊற வைக்கவும்.

* வாணலியில் சிறிது வெண்ணையை போட்டு சிறு சதுரங்களாக நறுக்கிய பன்னீரை பொன்னிறமாக வறுத்து எடுத்துகொள்ளவும்.

* வறுத்து அரைக்க தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை வெறும் வாணலியில் மிதமான சூட்டில் வறுத்து மிக்சியில் போடவும்.

* பொடியாக அரிந்த வெங்காயத்தை வறுத்த மசாலாவுடன் மிக்சியில் போட்டு அரைக்கவும்.

* வாணலியில் மீதமுள்ள வெண்ணையை போட்டு அதில் அரைத்த மசாலா, இஞ்சி பூண்டு விழுது, வெள்ளை மிளகுத்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

* மேற்சொன்ன கலவை நன்கு வதங்கியவுடன் குங்குமப்பூ சேர்த்து காய்ச்சிய பாலை வதங்கும் மசாலாக் கலவையில் ஊற்றவும்.

* பாலில் ஊற வைத்த முந்திரி-பாதாம் பருப்புகளை மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.

* அந்த விழுதை கொதிக்கும் பாலுடன் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.

* பிறகு வறுத்த பன்னீர் துண்டுகளை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து மேலும் ஒரு கொதிவிடவும்.

* நெய்யில் வறுத்த உலர் திராட்சை, ‘பிரஷ் க்ரீம்’, துருவிய சீஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.



குறிப்பு:

* கறுப்பு வண்ணத்துடன் இருக்கும் ‘ஷாஹி ஜீரா’ சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். ‘ஷாஹி ஜீரா’ கிடைக்காவிட்டால் சாதாரணமாக நாம் உபயோகிக்கும் சீரகத்தை உபயோகிக்கலாம்.

* ‘பிரஷ் கிரீம்’ துருவிய சீஸ் கிடைக்காவிட்டால் வீட்டில் உள்ள கடைந்த பாலேட்டைப் போட்டு அலங்கரிக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply