வேலை தேட தொடங்கும் முன் செய்யவேண்டிய 5 கடமைகள் | Tamil Serial Today Org

வேலை தேட தொடங்கும் முன் செய்யவேண்டிய 5 கடமைகள்

ads 1

வேலை தேட தொடங்கும் முன் செய்யவேண்டிய 5 கடமைகள்புதிதாக வேலை தேட ஆரம்பிக்கப்போகிறீர்களா அல்லது தற்போது இருக்கும் வேலையிலிருந்து வேறு வேலைக்கு விண்ணப்பிக்க போகிறீர்களா? அப்படியானால் கீழ்கண்ட வழிமுறைகள் கண்டிப்பாக கைகொடுக்கும்.


1.நிறுவனத்தைப் பற்றிய ஆராய்ச்சி:

முதல் நாம் செல்ல வேண்டிய நிறுவனத்தினைப் பற்றிய தகவல்களை இணைய பக்கத்தில் சென்று “contact us” பக்கத்தில் சென்று நிறுவனத்தைப் பற்றிய தகவல்களை ஆராய்ந்து “Mision” “vision ” பற்றிய தகவல்களை முற்றிலும் தெரிந்து கொள்வது மிக அவசியம். அதன் மூலம் அந்நிறுவனத்தின் முந்தைய கொள்கைகளையும், சாதனைகளையும் பற்றித் தெரிந்து கொள்வதன் மூலம் ஒரு நம்பிக்கையை பெற முடியும்.


2.”Job Description” ஐ தெளிவாக அறியவும்:

இரண்டாவதாக கொடுக்கப்பட்டுள்ள job Description பகுதியை தெளிவாக வாசித்து கொள்ளவும். ஏனெனில் ஒவ்வொரு கம்பெனியும் ஒவ்வொரு நிபந்தனைகளை விதித்திருக்கும். ஆகையால் புதிதாக வேலை தேடுபவர்கள் அதற்கேற்ற தகுதிகளுடன் அவரவர் தகுதிகளை ஒப்பிட்டு பார்ப்பின் ஒரு கம்பெனி நம்மிடம் என்ன எதிர்பார்ப்பு வைத்திருக்கிறது என்பதையும் வேலைக்கான கடமைகளையும் அறியலாம்.


3.நேர்மறை எண்ணம் :

மூன்றாவதாக நேர்காணலிடுபவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கடினமான மற்றும் தெரியாத கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றாலும் அந்த தடுமாற்றத்தை முகத்தில் காட்டாமல் இருப்பது மிக முக்கியமான ஒன்றாகும். மேலும் தெரியாத கேள்விகளுக்கு தெரிந்தது போல பாவனைகள் செய்வதை முற்றிலும் தவிர்ப்பது முக்கியமான ஒன்றாகும்.


4.Resume ஒரு பார்வை:

நான்காவதாக முக்கியமான ஒன்று நமது “resume” யினை முழுவதுமாக தெரிந்து வைத்திருப்பது அவசியமே!! மேலும் அதில் முக்கியமாக முழுவதும் சரியாக தெரிந்தவற்றை நேர்காணலிடுபவர்களுக்கு தெரியும்படி ஹைலைட் செய்வது நல்லது.


5.ஆயத்தமாக்கி கொள்:

கடைசியாக மேற்கூறிய அனைத்துடன் சில முக்கியமான கேள்விகளுக்கு ( ஊதியம், விடுமுறை நாட்கள் , வீட்டிலிருந்தபடியே வேலை செய்தல், வருகைப்பதிவு) போன்ற வழக்கமான கேள்விகளுக்கு முன்கூட்டியே பதில்களை தயார் செய்து கொள்வது நல்லது.

ads2
Rates : 0
6
7
VTST BN
9
10
11