வேர்க்கடலை பிட்லா

Loading...

வேர்க்கடலை பிட்லா
தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 50 கிராம்
பிஞ்சு கத்தரிக்காய் – 4
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் – 8
தனியா – ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டீ ஸ்பூன்
மிளகு – 10
வெந்தயம் – 1/4 டீ ஸ்பூன்
கசகசா – ஒரு டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை வேர்க்கடலை புளி கரைசல் – தலா 3 டேபிள் ஸ்பூன்
உப்பு, கடுகு, பெருங்காயம், எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை:

* வேர்க்கடலை மற்றும் துவரம்பருப்பை தனித்தனியாக வேகவைக்கவும்.

* எண்ணெயில் காய்ந்த மிளகாய், தனியா, உளுத்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், கசகசா ஆகியவற்றை வறுக்கவும்.

* வேகவைத்த வேர்க்கடலை + வறுத்த மசாலா சாமான் + ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்துருவல் மூன்றையும் மிக்ஸியில் மைய அரைக்கவும்.

* நீரில் கத்தரி மற்றும் தக்காளியை உப்பு சேர்த்து வேக விடவும்.

* வெந்தபின் புளிக்கரைசலை விடவும்.

* பிறகு அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலை விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.

* 10 நிமிடம் கழித்து வெந்த துவரம் பருப்பை நன்கு மசித்து அதில் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.

* பிறகு வாணலியில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் தாளித்துக் கொட்ட வேர்க்கடலை பிட்லை ரெடி!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply