வெற்றிகரமாக ஒமனில் தரையிறங்கியது உலகின் முதல் சோலார் விமானம்

Loading...

வெற்றிகரமாக ஒமனில் தரையிறங்கியது உலகின் முதல் சோலார் விமானம்அபுதாபியில் இருந்து நேற்று புறப்பட்ட உலகின் முதல் சோலார் விமானமான, ‘சோலார் இம்பல்ஸ்-2′ வெற்றிகரமாக ஓமனில் தரை இறங்கியது.

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியில், உலகின் முதல் சோலார் விமானம் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டது. இரண்டு பேர் மட்டுமே அமரக்கூடிய இந்த விமானத்தின் 72 மீட்டர் (சுமார் 236 அடி) நீள இறக்கைகளில் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த விமானத்தை வடிவமைப்பதில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த விமானி ஆண்ட்ரே போர் ச்பெர்க் மற்றும் விமானி பெர்ட்ராண்ட் பிக் ஆகியோர் முக்கியப்பங்கு வகித்துள்ளனர். 12 வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது வெற்றிகரமாக நனவாகி உள்ளது.

‘சோலார் இம்பல்ஸ்-2′ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சோலார் விமானம் அபுதாபி அல் புத்தீன் நிர்வாக விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 7.12 மணிக்கு தனது பயணத்தை தொடங்கியது. இந்த சோலார் விமானத்தை, விமானி ஆண்ட்ரே போர்ச்பெர்க் மற்றும் விமானி பெர்ட்ராண்ட் பிக் ஆகிய இருவரும் இயக்கி உள்ளனர். அபுதாபியில் புறப்பட்ட இந்த விமானம் ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டிற்கு சுமார் 12 மணி நேரத்தில் வந்தடைந்தது.

விமானம் வெற்றிகரமாக தரையிறங்கிய போது, கட்டுபாட்டு அறையில் இருந்த விமானிகள், அதிகாரிகள் என அனைவரும் மகிழ்ச்சியுடன் கைத்தட்டி வரவேற்றனர். இங்கிருந்து புறப்படும் இந்த விமானம், இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு இன்று வருகிறது. அதன்பின், மியான்மர், சீனா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுவிட்டு வருகின்ற ஜூலை மாதத்திற்குள் அபுதாபிக்கு வந்து சேரும் என்று கூறப்படுகிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply