வெறும் வயிற்றில் பச்சை முட்டை சாப்பிடும் பழக்கமா

Loading...

வெறும் வயிற்றில் பச்சை முட்டை சாப்பிடும் பழக்கமாஉடலை ஸ்லிம்மாக பராமரிக்க நினைப்பவர்கள் சத்தான உணவுளை உட்கொள்வதோடு மட்டுமல்லாமல், உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆனால், அந்த உணவுமுறைகளிலும் கவனம் தேவை. எவ்வகை உணவுகள் எடையை குறைக்கும் என்பது தெரியாமல் எடுத்துக்கொள்ளக்கூடாது.


இதோ இரண்டு டிப்ஸ்

வெயில் காலத்தில் ஐஸ்கிரீம்களின் விற்பனைஅதிகம். டயட்டில் இருப்பவர்கள் எப்போதும் ஐஸ்கிரீமை மறுப்பார்கள். உடலில் அதிக கொழுப்பை உருவாக்கும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம். ஆனால், தரமான ஐஸ்கிரீம் சாப்பிட்டால் கொழுப்புகளை குறைக்கலாம் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஐஸ்கிரீம் தயாரித்தல், பாதுகாக்கப்படும் முறைகள் சுத்தமானதாக இருந்தால், ஐஸ்கிரீமினால் வரும் தொற்று பாதிப்புகளை தவிர்க்கலாம்.


வெறும் வயிற்றில் பச்சை முட்டை

நம் உடலை ஸிலிம்மாக வைத்திருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், வெறும் வயிற்றில் பச்சை முட்டை சாப்பிடுவார்கள். ஆனால், இது தவறு, பச்சை முட்டை செரிமானமாக குறைந்தது 8 மணி நேரமாகும். இதனால், நம் வயிற்றில் உள்ள குடலுறிஞ்சிகளால், செலீனியம், பொட்டாசியம், வைட்டமின்கள் போன்று நுண்சத்துகளை உறிஞ்ச முடிவதில்லை. இதனால் ஊட்டசத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply