வெந்தயக்கீரை மீன் குழம்பு | Tamil Serial Today Org

வெந்தயக்கீரை மீன் குழம்பு

Loading...

வெந்தயக்கீரை மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:

வஞ்சிரமீன் – 1/2 கிலோ
வெங்காயம் 200 கிராம்
தக்காளி – 350 கிராம்
தக்காளி பேஸ்ட் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் 2 டீ ஸ்பூன்
தனியாத்தூள் 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள், சீரகத்தூள் தலா – 1/2 டீ ஸ்பூன்
உப்பு – ருசிக்கு தேவையான அளவு
வெந்தயம் – 1 டீ ஸ்பூன்
வெந்தயக்கீரை சிறிய கட்டு – 1
புளி ஒன்னறை சிறிய லெமன் சைஸ்


தாளிக்க:

நல்லெண்ணை – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு, சீரகம், சோம்பு, மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 6 பெரிய பல்
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி
தேங்காய் பவுடர் (அ) தேங்காய் பத்தை – 4 ஸ்பூன் (அ) 4 பத்தை
கொத்துமல்லி தழை – அரை கைப்பிடி


செய்முறை:

* மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக போடவும்.

* வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

* வெந்தய கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்­ணீரை வடிக்கவும்.

* தக்காளியை மையாக அரைத்து வைக்கவும்.

* தாளிக்க கொடுத்துள்ளவைகளை எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பூண்டை தட்டி போட்டு வதக்கி, கருவேப்பிலை சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.

* வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும் எல்லா மசாலா தூள் வகைகள், ஊறிய வெந்தயம், வெந்தயக்கீரை, தக்காளி பேஸ்ட் போட்டு நன்கு 2 நிமிடம் வதக்கவும்.

* அரைத்த தக்காளியை சேர்த்து அரை டம்ளர் தண்­ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

* பிறகு புளியை ஒரு டம்ளர் தண்ணீ­ரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.

* 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

* கடைசியாக மீனையும் தேங்காயையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

* கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.

* சுவையான மணமான மருத்துவ குணம் நிறைந்த மேத்தி மீன் குழம்பு ரெடி.


குறிப்பு:
வெந்தயமும், நல்லெண்ணையும் சேருவதால் வயிற்றுக்கு எந்த உபாதையும் அளிக்காது. உடல் சூட்டை தணிக்கும் குழம்பு. ப்ளெயின் ரைஸ், ரொட்டி, தோசை, ஆப்பம், குஸ்கா, அனைத்துக்கும் பொருந்தும்

Loading...
Rates : 0
VTST BN