வெஜ் மசாலா பாத்

Loading...

வெஜ் மசாலா பாத்
தேவையானவை:
அரிசி – ஒரு கப், நறுக்கிய காய்கறி கலவை (கத்திரிக்காய், கேரட், வாழைக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், உருளைக்கிழங்கு, பீன்ஸ்) ஒரு கப், உரித்த சின்ன வெங்காயம் – 10, ஆய்ந்த முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, புளி – எலுமிச்சை அளவு, துவரம்பருப்பு – கால் கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப.

அரைக்க:
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கசகசா – ஒரு டீஸ்பூன், முந்திரி – 6, பூண்டு – 4 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3.

செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். புளியை ஊறவைத்து, கரைத்து, அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வைக்கவும். துவரம்பருப்பை வேகவைக்கவும். குக்கரில் நெய் விட்டு… வெங்காயம், காய்கறி கலவை, பெருங்காயத்தூள், முருங்கைக்கீரையை வதக்கி, அரைத்த மசாலா விழுதை சேர்த்து மேலும் வதக்கவும். இதில் வேகவைத்த பருப்பு சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றி, தேவைப்பட்டால் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, அரிசியை சேர்த்துக் கிளறவும். பிறகு குக்கரை மூடி, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு குக்கரைத் திறந்து, கறிவேப்பிலையை தாளித்து சேர்த்துக் கிளறி பரிமாறவும்..

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply