வெஜ் பொங்கல்

Loading...

வெஜ் பொங்கல்
தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 4 கப்
பாசிப்பருப்பு – 1 கப்
பெரிய கேரட் – 1
பச்சை பட்டாணி – 1/2 கப்
இஞ்சி – 10 கிராம்(பொடியாக நறுக்கியது)
பூடு – 4 பல்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
மிளகு – 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
கடுகு உளுந்து – 1/2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
மல்லித்தழை – சிறிதளவு
எண்ணைய் – 1 குழிக்கரண்டி
நெய் – 100 மி.லி.
முந்திரி – 15
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

* இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* கேரட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

* அரிசியை உப்பு போட்டு, நன்கு குழைய வேக வைக்கவும்.

* பாசிப்பருப்பை சிம்மில் சிவக்க வறுத்து, நன்கு குழைய வேக வைக்கவும்.

* தனித்தனியே வேக வைத்த சாதத்தையும் பருப்பையும் ஒன்றாக கிளறவும்.

* கொழ கொழன்னு வருவதற்கு பருப்பு வேக வைத்த தண்ணியை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ண வேண்டும்.

* சாதம் செட்டாகும் நேரத்தில்…, ஒரு கடாயில் எண்ணை ஊற்றி கடுகு உளுந்து, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

* பொரிந்த பின் கேரட்டையும் வேக வைத்த பட்டாணியையும் சேர்த்து வதக்கவும்.

* சாதம், பருப்பு, வதக்கிய காய் எல்லாவற்றையும் நன்கு மிக்ஸ் பண்ணி, 2 கப் தண்ணீ­ர் சேர்த்து குக்கரில் 10 நிமிடம் சிம்மில் வேக வைக்கவும்.

* இறக்கியவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, கொத்தமல்லி, மீதமுள்ள நெய் ஊற்றி பரிமாறவும்.

* தண்­ணீருக்கு பதில் தேங்காய்ப் பால் பயன்படுத்தினால் சுவை இன்னும் பிரமாதமா இருக்கும்.

* புதினா சட்னி இதற்கு சரியான சைட் டிஷ்!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply