வெஜிடபிள் சாலட்

Loading...

வெஜிடபிள் சாலட்

தேவையானவை:
துருவிய கேரட், துருவிய முட்டைகோஸ் – தலா கால் கப், மிகவும் மெல்லி யதாக நறுக்கிய குடமிளகாய் – கால் கப், எலுமிச்சைப் பழம் – ஒன்று, நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன் – பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் (குழையாமல் வேகவிடவும்), பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:
ஒரு கிண்ணத்தில் காய்கறிகளைப் போட்டு வெந்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கி இறக்கி, காய்கறிக் கலவையில் சேர்க்கவும். பரிமாறும் முன் எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
கசப்பு இல்லாத வெள்ளரிக் காயை துருவி இதனுடன் சேர்க்க லாம்… நறுக்கிய தக்காளியையும் சேர்க்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply