வீட் பிரெட் மசாலா டோஸ்ட்

Loading...

வீட் பிரெட் மசாலா டோஸ்ட்
தேவையானவை:
வீட் பிரெட் (கோதுமை ரொட்டி) – 6 ஸ்லைஸ், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

அரைக்க:
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு, பூண்டு – 6 பல், சீரகம் – அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைப் பழம் – அரை மூடி (சாறு எடுக்கவும்), உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களுடன் சிறிதளவு நீர் சேர்த்து, மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும். இரண்டு ஸ்லைஸ்களின் ஒருபுறம் வெண்ணெய் தடவி, அவற்றின் உள்ளே அரைத்த சட் னியை தடவி… குறுக்காக வெட்டவும். தோசைக்கல்லை காயவைத்து, வெட்டிய பிரெட் துண்டுகளை போட்டு இருபுறமும் சிவக்க சுடவும் (சுற்றிலும் நெய் (அ) வெண்ணெய் சிறிது ஊற்றிக்கொள்ளவும்). இதேபோல் எல்லா பிரெட் ஸ்லைஸ்களையும் செய்து கொள்ளவும்.

குறிப்பு:
பிரெட் டோஸ்டர் இருந்தால் அதில் வைத்தும் எடுக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply