வி.எல்.சி. பிளேயர் நூறு கோடிக்கு மேல் தரவிறக்கம்

Loading...

வி.எல்.சி. பிளேயர் நூறு கோடிக்கு மேல் தரவிறக்கம்விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில், ஆடியோ மற்றும் விடியோ பைல்களை இயக்க, பெரும்பாலானவர்களால், வி.எல்.சி. பிளேயர் பயன்படுத்தப்படுகிறது. இலவசமாக இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த வகையில், இதுவரை நூற்றுப் பத்து கோடிக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டதாக, இதனைத் தயாரித்து வழங்கும் வீடியோலேன் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐ.ஓ.எஸ். சிஸ்டம் இயங்கும் சாதனங்களுக்காக, 13 கோடியே 40 லட்சம் முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அளவிற்கு இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வளர்வதற்கான காரணத்தை, வீடியோ லேன் நிறுவன அதிகாரிகளிடம் கேட்ட போது, வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் கூடுதல் வசதிகளுடன் கூடிய, எளிதில் இயக்கக் கூடிய மீடியா பிளேயராக வி.எல்.சி. இருப்பதே காரணம் என்று, இந்நிறுவனத் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

எளிமை மட்டுமின்றி, மிக அதிக எண்ணிக்கையில், (எ.கா. MPEG, DivX, MKV, WebM, WMV, and MP3) பலவகையான ஆடியோ மற்றும் விடியோ பார்மட் பைல்களை இந்த பிளேயர் கையாள்வதும் ஒரு காரணமாகும்.

வி.எல்.சி. மீடியா பிளேயர், திறவூற்று பயன்பாட்டுத் தொகுப்பு வகையைச் (free open source cross-platform) சேர்ந்தது. மல்ட்டி மீடியா பிரிவில், நாம் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளையும் தரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் புகழுக்குக் காரணமாகும். பைல்கள் மட்டுமின்றி, டிஸ்க், வெப்கேம் மற்றும் பிற சாதனங்களில் உள்ள பைல்களையும் இது இயக்கும்.

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் வி.எல்.சி. மீடியா பிளேயர் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. மிகச் சிறந்த முறையில் மீடியா பைல்களை இது கையாள்கிறது. மிகத் துல்லியமாக ஒலியைப் பிரித்துத் தருகிறது. பலவகையான பார்மட் பைல்களையும், ஸ்டோரேஜ் மீடியாவில் உள்ள பைல்களையும் இது கையாள்வதே இதன் பயன் தன்மைக்குக் காரணமாகும்.

அதனால் தான் கோடிக்கணக்கானவர்கள் இதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து இது மக்களின் மனங் கவர்ந்த மீடியா பிளேயராக இயங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply