விறால் மீன் குழம்பு

Loading...

விறால் மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:

விறால் மீன் (3/4 கிலோ எடையுள்ளது) – 1
சின்ன வெங்காயம் – 1/4 கிலோ
தக்காளி – 1/4 கிலோ
தேங்காய்ப்பால் – 2 கப்
பூண்டு – 1
கடுகு – 1 டீ ஸ்பூன்
காய்ஞ்ச மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வெந்தயம் – ஒரு டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
எண்ணை – ஒரு குழிக்கரண்டி
கொத்துமல்லி – சிறிதளவு



செய்முறை:

* மீனை நல்லாக்கழுவி துண்டுகள் போடுங்க.

* குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணைவிட்டு கடுகு, காய்ஞ்ச மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வதக்குங்க.

* வெங்காயம் போட்டு நல்லா வதக்கி, பூண்டு சேர்த்து வதக்குங்கள்.

* அப்புறம் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்குங்கள். அதோடு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து கொத்துமல்லி கறிவேப்பிலை சேர்த்து தேங்காய்ப் பாலை ஊத்துங்க.

* கொதிக்கறப்போ மீன் துண்டுகளைப் போட்டு ஒரு கொதிவிட்டு இறக்குங்க.



குறிப்பு:
எப்போதுமே விறால் மீன் வாங்குறப்போ முக்கால் கிலோ அல்லது அதுக்கு மேல எடை இருக்கிற மாதிரி பார்த்து வாங்கணும். அதுக்கு கீழே எடை இருந்தா ருசியாகவே இருக்காது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply