வினிகரின் பயன்கள்

Loading...

வினிகரின் பயன்கள்
கறைபோக்கும் வினிகர் :

வெற்றிலைக் கறை துணியில் பட்டால், அந்த இடத்தில் வினிகர் ஊற்றி தேய்த்து கழுவினால் போய்விடும்.

அலுமினிய குக்கரின் உட்புறம் கறுப்பாக இருந்தால் சிறிது வினிகரைப் பூசி 15 நிமிடம் வைத்திருக்கவும். பின்னர் சிறிது நீர் ஊற்றிக் கொதிக்க விட்டால் குக்கரின் கறை நீங்கிப் பளிச்சிடும்.

வாஷ்பேஷனில் தண்ணர் உப்பு படிந்து கறையாக இருந்தால் வினிகருடன் சாக்பௌடர் கலந்து பூசி சிறிது நேரம் வைத்திருந்து பின் தேய்த்துக் கழுவவும்.

கொழுப்பைக் குறைக்கும் வினிகர் :

வினிகர் சோப்பதால் உடம்பிலுள்ள கொழும்பு குறைக்கிறது. தவிர Anti inflammation வராமல் தடுக்கிறது. எதுவாயினும் அளவோடு சேர்ப்பது நல்லது.


சுத்தப்படுத்தும் வினிகர் :

குழந்தைகளின், ஃபீடிங் போத்தலை தினசரி கழுவும்போது துளி வினிகர் விட்டுக் கழுவினால் சுத்தமாகிவிடும்

ஸ்கூலுக்கம், அலுவலகத்துக்கும் கொடுத்தனுப்பும் டிபன் பாக்ஸ்களையும் இப்படி கழுவலாம்.

ஃப்ரிட்ஜில் காய்கறிகளின் வாடை, பால் வாடை, மாவு வீச்சம் என கவலையாக இருக்கும். எனவே வாரம் ஒரு முறை ஒரு ஸ்பூன் வினிகர் ஒரு மக் தண்ணீரில் ஃபிரிட்ஜை துடையுங்கள்.


பூச்சித் தொல்லை வராமல் இருக்க :

சமையலறையில் உள்ள அலமாரியில் பூச்சிகள் தொல்லை ஏற்படாமலிருக்கு, வினிகர் கலந்த நீரால் வாரம் இருமுறை துடைக்க வேண்டும்.


வெண்கரு பிரியாமல் இருக்க :

அவித்த முட்டை தயாரிக்கும் போது முட்டை வேக வைக்கும் தண்ணரீல் சில துளிகள் வினிகர் சேர்ப்பதால் வெண்கரு பிரியாமல் இருக்கும்


பட்டாணி நிறம் மாறமால் இருக்க :

பச்சைப்பட்டாணி வேகவைக்கும் போது, அதன் உண்மையான பச்சை நிறம் போகமலிருக்க, நான்கு துளி வினிகர் ஊற்றி வேக வைத்தால் பச்சை நிறத்தை பாதுகாக்கலாம்.


மீன் வாடை வராமல் இருக்க :

மீன் கழுவும் போது சிறிதளவு உப்பு, வினிகர் இரண்டும் சேர்த்து கழுவினால் அந்த மீனின் கெட்ட வாடை நீங்கி விடும்.


இறைச்சி ஸ்மூத் ஆக :

இறைச்சி வகைளை சமைக்கும் போது வினிகர் சிறிது கலந்து ஊறவைத்து பின் சமைத்தால் இறைச்சி மெத்தென்று பஞ்சு போல் வேகும்
கண்ணாடிப் பாத்திரங்கள், கண்ணாடி டம்ளர்கள், கார் கண்னாடி இவற்றை வினிகர் கலந்த நீரினால் சுத்தமாகக் கழுவினால் பளபளக்கும்.

பல்செட் வைத்திருப்பவர்கள், அதை இரவில் வினிகர் கலந்த நீரில் போட்டு வைத்தால் வாடை இல்லாமல் இருக்கும்.

டைனிங் டேபிளில் சில சமயம் ஒரு துர்வாடை அடிக்கும். வினிகரை நல்ல மிருதுவான துணி அல்லது பஞ்சு கொண்டு துடைத்தால் வாடை போய் புதுசு போல பளபளக்கும்.

உங்கள் சருமம் உலர்ந்த சருமமாக இருந்தாலோ, அல்லது வெடிப்புள்ள சருமமாக இருந்தாலோ வினிகரை தடவினால் குணமாகும்.

ஷாம்பூ போட்டு தலை குளித்த பின் சிறிதளவு வினிகர் கலந்த நீரினால் அலசினால் முடிபட்டுப் போலாகும்.

வினிகர் கலந்த நீரில் பாதம் மூழ்கும் வரை அரைமணி நேரம் ஊறவைத்து பின்பு நன்றாக கழுவினால், கால்விரல் நகங்களில் உள்ள அழுக்குகள் போய், நகங்கள் சொத்தையாக இருந்தாலும் சில நாட்களில் சரியாகி விடும்.

அரைகப் வினிகர் எடுத்து, குளிக்கும் நீரில் (Warm Water) கலந்து குளித்தால் சருமம் மிருதுவாகும்.

பொடுகுத் தொல்லை இருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகரை தலையில் தடவி, சில நிமிடங்கள் கழித்து நன்கு அலசிக் குளித்தால் பொடுகு போய்விடும்

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN