விந்தணுக்கள் பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு தெரியாத உண்மைகள்

Loading...

விந்தணுக்கள் பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு தெரியாத உண்மைகள்விந்தணு, இது பெண்ணின் கருமுட்டையோடு இணைந்தால் தான் கருத்தரிக்க முடியும். விந்தணுவின் திறன், உற்பத்தி, மற்றும் வேகம் போன்றவை சரியாக இருந்தால் தான் விந்து நீந்தி சென்று கருமுட்டையை அடைய முடியும்.

இன்று நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறையால், உட்கொள்ளும் உணவு முறை மாற்றத்தால் வெகுவாக பாதிக்கப்படுவது விந்தணுக்கள் தான். ஓர் ஆணை, அவன் அடையும் மிகப்பெரிய தோல்வியைவிட, அவனது ஆண்மையில் கோளாறு எனும் செய்தி மிகையாக மனதளவில் சோர்வடைய செய்யும்.

காரணம், சமூகம் என்ன சொல்லும் என்ற வேதனை தான். உங்கள் விந்தணுவின் திறன் என்ன? அது எப்படி நீந்துகிறது? வெளியேறிய நாளில் இருந்து எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கும்? போன்ற கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? இல்லை என்றால் இதை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்….


உண்மை # 1
வெளியேறும் விந்தின் ஒவ்வொரு மில்லிலீட்டர்-லும் ஏறத்தாழ 20 – 100 மில்லியன் விந்தணுக்கள் இருக்கின்றன. ஓர் ஆரோக்கியமான ஆணிடம் இருந்து விந்து வெளியேறும் போது அதில் 1 – 5 மில்லி வரையிலான அளவு இருக்கும்.


உண்மை # 2
விந்தின் தலை பகுதியில் தான் மரபணு பொருட்கள் தங்கியிருக்கின்றன. நடு பகுதியில், இழைமணி எனும் வாலுக்கு சக்தி தந்து வேகமாக நீந்த செய்யும் பொருள் அடங்கியிருக்கிறது.


உண்மை # 3
விந்தணுவின் சராசரி அளவு 5 மைக்ரோமீட்டர் ஆகும். அதாவது 0.05 மில்லிமீட்டர். வெறும் கண்ணால் உங்களால் தனியொரு விந்தணுவை பார்க்க இயலாது.


உண்மை # 4
மனித கருமுட்டையை வெறும் கண்களால் பார்க்க இயலுமாம். இது விந்தணுவை விட 30 மடங்கு பெரியதாக இருக்கும்.


உண்மை # 5
விந்தணுக்கள், கருமுட்டையில் இருந்து வெளிப்படும் பொருளை வைத்து அது எந்த திசையில் இருக்கிறது என அறிய முடியும். பொதுவாக கருமுட்டை இருக்கும் இடத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும்.


உண்மை # 6
விந்தணுக்களால் ஒரு மணிநேரத்திற்கு 0.2 மீட்டர் அளவு நீந்தி செல்ல முடியும். வேகமாக நீந்தி செல்லும் விந்தணு தான் முட்டையை சென்றடைகிறது.


உண்மை # 7
மனித உடலை விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில் விந்தணுக்கள் இறந்துவிடும். ஆனால், பெண்ணின் உடலுக்குள் 3-5 நாட்கள் வரை உயிருடன் இருக்கும்.


உண்மை # 8
நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த ஆண்களோடு ஒப்பிடுகையில், இன்றைய ஆண்கள் மத்தியில் விந்தணு திறன் மற்றும் உற்பத்தி அளவு குறைவாக இருக்கிறது என பல ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளன.


உண்மை # 9
விந்து வெளியேற்றும் போது, வெளிவராத விந்தணுக்கள், மீண்டும் ஆணின் உடலுக்குள் சென்று விடுகின்றன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply