வாழைப்பழப் பொங்கல்

Loading...

வாழைப்பழப் பொங்கல்

தேவையானப் பொருட்கள்:

பச்சரிசி – 1 கப்
பொடித்த வெல்லம் – 1 கப்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 10
திராட்டை – 12
ஏலக்காய் தூள் – 1 டீ ஸ்பூன்
வாழைப்பழம்(பொடியாக நறுக்கியது) – 2
பால் – 1/2 கப்



செய்முறை:

* அரிசியைக் கழுவிக் கொள்ளவும்.

* பாலுடன் 2 கப் தண்­ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, கொதித்ததும் அரிசியைச் சேர்க்கவும்.

* சிறு தீயில் குழைய வேக விடவும்.

* வெந்ததும் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, வெந்த அரிசியுடன் சேர்க்கவும்.

* அத்துடன் வாழைப்பழத்தைச் சேர்த்து, ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி, மேலும் நெய் விட்டு இறக்கவும்.

* அட்டகாசமான வாழைப்பழப் பொங்கல் ரெடி.

Loading...
Rates : 0
VTST BN