வாயு தொல்லையால் அவஸ்தைப்படுறீங்களா

Loading...

வாயு தொல்லையால் அவஸ்தைப்படுறீங்களாவாயு பிரச்சனையை தவிர்க்க கட்டுப்பாடான உணவு பழக்கம், மெதுவாக உணவுகளை மென்று உண்ணுதல், சிறிய அளவில் அடிக்கடி உண்ணுதல், அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருகுதல் மற்றும் நார்ச்சத்து அடங்கிய உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற எளிய, முக்கிய பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

விரைவான நிவாரணத்திற்கு, மசாலா பொருட்கள், காபி, திடமான தேநீர், இறைச்சி, கேக், ஆல்கஹால் மற்றும் மருத்துவர் குறிப்பிட்டு கூறும் புளிப்பான உணவு பொருட்களை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒரு கப் தண்ணீரில், எலுமிச்சை சாற்றை பிழிந்து, அதனுடன் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்துக் கொள்ளவும்.

பேக்கிங் சோடா தண்ணீரில் நன்றாக கரையும் வரை அதை நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். இதனை பருகினால், இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். முடிந்த வரை இதனை காலையில் செய்து, உடனடி நிவாரணியை பெறுங்கள்.

மூலிகை தேநீர், செரிமான அமைப்பை துரிதப்படுத்தி மேம்படுத்தவும் செய்யும். அதிலும் சீமைச்சாமந்தி, ராஸ்பெர்ரி, நாவல் பழம் மற்றும் புதினாவால் செய்யப்பட்ட தேநீர் குடிப்பது மிகவும் நல்லது.

தினமும் காலையில் எழுந்ததும் 1-2 பல் பூண்டை நெருப்பில் சுட்டு வெறும் வயிற்றில் சாப்பிட்டு, பின் ஒரு டம்ளர் சுடு தண்ணீரைப் பருகினால், வாயுத் தொல்லை நீங்குவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். தினமும் அரை ஸ்பூன் பெருங்காயத்தூளை வாயில் போட்டு சுடு தண்ணீர் குடித்தால் வாயு தொல்லை வரவே வராது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply