வலிகளை நகர்த்தும் உணவுகள்

Loading...

வலிகளை நகர்த்தும் உணவுகள்இன்றைய நவீன உலகில் கால்வலி, கைவலி, தலைவலி என பல்வேறு வலிகளை உடல்ரீதியாக சந்திக்கிறோம்.

எப்போதெல்லாம் வலி வருகிறதோ, அப்போது மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகள் அல்லது மருந்துக்கடைகளில் விற்கும் மருந்துகளை சாப்பிட்டு வலியை விரட்டி விடுகிறோம்.

ஆனால், இது நிரந்தர தீர்வு என்று சொல்ல முடியாது, மருந்துகள் எடுத்துக்கொண்டாலும், மருந்தாகும் உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.

வலிகளை போக்கும் உணவுகள்செர்ரி

உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர் சிலர் தசைப்பிடிப்பு வலியால் அவதிப்படலாம், அவர்கள் ஒரு டம்ளர் செர்ரி பழ ஜீஸ் குடித்தால் வலியில் இருந்து விடுபடலாம்.பூண்டு

பல்வேறு பிரச்சனைகளுக்கு நிவாரணியாக பயன்படும் பூண்டினை தட்டி, ஆலிவ் ஆயிலில் போட்டு சூடேற்றி அந்த எண்ணெய் கொண்டு மூட்டுகளுக்கு மசாஜ் செய்து வந்தால் மூட்டு வலிகள் குணமாகும்ஓட்ஸ்

ஓட்ஸில் மக்னீசியம் அதிகம் உள்ளதால், பெண்கள் இதனை உட்கொண்டு வந்தால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று பிடிப்பு மற்றும் வயிற்று வலி குணமாகும்.திராட்சை

திராட்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முதுகு வலியில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முதுகு வலியை குறைக்கும்கிராம்பு

பல் வலிகளுக்கு கிராம்பு சிறந்த நிவாரணியாகும், மேலும் கிராம்பை பல் வலியின் போது வாயில் போட்டு கடித்துக்கொண்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply