வருகிறது கார் சாவியாக பயன் படக்கூடிய ஆப்பிள் வாட்ச்

Loading...

வருகிறது கார் சாவியாக பயன் படக்கூடிய ‘ஆப்பிள் வாட்ச்’ஆப்பிள் வாட்ச்சை இனி கார் சாவியாகவும் கிரெடிட் கார்டாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிம் குக் தி டெலிகிராஃப் பத்திரிகைக்காக கூறும்போது, “ஆப்பிள் வாட்ச்சை கார் சாவியாக பயன்படுத்திக்கொள்ளும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் இனி கொத்து கொத்தாக சாவியை கையில் சுமக்க வேண்டாம்.

மேலும், ஆப்பிள் பே மூலம் பணம் செலுத்தும் கிரெடிட் கார்டாகவும் இதனை உபயோகிக்கலாம். இத்தனை அம்சங்கள் இருந்தும் ஆப்பிள் வாட்ச்சின் சார்ஜ், ஐ ஃபோன்களை போல குறையாது. இதன் சார்ஜ் ஒரு நாளுக்கு நீடிக்கும்” என்றார்.

ஜெர்மனி மற்றும் இஸ்ரேலில் ஆப்பிள் உற்பத்தி மையத்தை தொடங்குவதற்கான ஆய்வை மேற்கொண்டிருக்கும் டிம் குக், இந்த ஸ்மார்ட் வாட்ச் மிக விரைவில் சந்தைக்கு வரும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply