வன்ட்ரைவில் (onedrive) பைல் சேமிக்கும் அளவை உயர்த்தியுள்ள மைக்ரோசாப்ட்

Loading...

வன்ட்ரைவில் (onedrive) பைல் சேமிக்கும் அளவை உயர்த்தியுள்ள மைக்ரோசாப்ட்வன்ட்ரைவில் (onedrive) பைல் சேமிக்கும் அளவு உயர்ந்துள்ளதா? கட்டணம் செலுத்தி எவ்வளவு சேவ் செய்திடலாம்? செலுத்தாமல் இலவசமாக எவ்வளவு சேவ் செய்திடலாம்? என்ற கேள்விகளுக்கு பதில்,

மைக்ரோசாப்ட் தரும் அற்புதமான க்ளவ்ட் பிரிவு சாதனம் வன்ட்ரைவில் (onedrive) . இதில் கட்டணம் எதுவும் செலுத்தாமல், 15 ஜி.பி. அளவு வரை பைல்களை சேவ் செய்து வைத்துப் பயன்படுத்தலாம். அனுப்பப்படும் பைல் ஒன்றின் அளவு 2 ஜி.பி.க்கு மேல் இருக்கக் கூடாது. அண்மையில் இந்த பைலுக்கான 2 ஜி.பி. அளவினை மைக்ரோசாப்ட் நீக்கியுள்ளது.

இதனால், ஒரு பைல் 2 ஜி.பி. அளவிற்கு மேல் இருந்தாலும், அதனை வன்ட்ரைவில் சேவ் செய்திட முடியும். இதனால், ஒருவர் மொத்த சேவ் செய்திடும் அளவினை வெகு சீக்கிரம் எட்டுவார் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. ஆபீஸ் 365 பயனாளர்களின் பைல் சேமிக்கும் அளவு ஒரு டெரா பைட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

வன்ட்ரைவில் இதுவரை பைல்களை சேமித்து வைத்துள்ளவர்களில் 75% பேர் 15 ஜி.பி.க்கும் குறைவாகவே பைல்களை சேமித்து வைத்துள்ளனர். எனவே, ஒரு டெராபைட் என்பது அளவற்ற நிலையை ஒத்த்தாகும். இப்போது பலரும் ஹை டெபனிஷன் மூவி பைல்களை சேவ் செய்து வருகின்றனர். இந்த வகை பைல் ஒன்றின் அளவு நிச்சயம் 3 அல்லது 4 ஜி.பி. இருக்கும்.

எனவே தான், சேமிக்கப்படும் பைல் அளவின் உச்சத்தை மைக்ரோசாப்ட் நீக்கியுள்ளது. இது வரவேற்கத்தக்கது தான். பைல் அளவு வரையறை இல்லை என்றால், வாடிக்கையாளர்கள், எதனையும் யோசிக்காமல் சேவ் செய்திட முயற்சிப்பார்கள். மொத்த அளவு நெருங்கிய பின்னரே, இது குறித்து யோசிப்பார்கள். ஒற்றை பைல் அளவு வரையறை நீக்கப்பட்டதால், தங்களின் மொத்த அளவை எட்டும் வாடிக்கையாளர்கள், கட்டணம் செலுத்தி வன்ட்ரைவில் சேமிக்க இடம் வாங்குவார்கள் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. கட்டணம் செலுத்தி வாங்குவதாக இருந்தால், நாம் கேட்கும் இடத்திற்கேற்றபடி செலுத்த வேண்டியதிருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply