லுச்சி பூரி

Loading...

லுச்சி பூரி
தேவையானவை:
கோதுமை மாவு அல்லது மைதா – 2 கப், பச்சைப் பட்டாணி – ஒரு கப், சர்க்கரை, ஓமம், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி – சிறு துண்டு (தோல் சீவவும்), பச்சை மிளகாய் – 3, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு


செய்முறை:
பச்சைப் பட்டாணியை வேகவைத்து அதனுடன் சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து, லேசாக நீர் தெளித்து விழுதாக அரைக்கவும். கோதுமை மாவு அல்லது மைதாவுடன் உப்பு, சர்க்கரை, ஓமம், அரைத்த பட்டாணி விழுது சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசையவும் (தண்ணீர் சேர்க்க வேண்டாம். மாவு கெட்டியாக இருந்தால் மட்டும், சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசையலாம்).
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை மெல்லிய பூரிகளாக இட்டு பொரித்தெடுக்கவும். உருளைக்கிழங்கு மசாலா அல்லது குருமாவுடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply