ராகி சேமியா பிரியாணி

Loading...

ராகி சேமியா பிரியாணி
தேவையானவை:
ராகி சேமியா – ஒரு கப், பச்சைப் பட்டாணி – 50 கிராம், நறுக்கிய பீன்ஸ், கேரட் – தலா 2 டேபிள்ஸ்பூன், தக்காளி – ஒன்று (நறுக்கவும்), பெரிய வெங்காயம் – ஒன்று (நீளமாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினாத்தழை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, சோம்பு – அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை – ஒன்று, பிரியாணி மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்), பூண்டு – 6 பல், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, ஏலக்காய் – 2, நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், சோம்பு, பூண்டு, பிரிஞ்சி இலை போட்டு வதக்கி… வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், புதினா, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதில் 2 கப் நீர் விட்டு, பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து, சிறிதளவு நல்லெண்ணெய் விடவும் (இதனால் சேமியா உதிர் உதிராக வேகும்). இப்போது ராகி சேமியாவைப் போட்டு கிளறி, வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply