ரத்த வாந்தியை கட்டுப்படுத்தும் திருநீர்பச்சை

Loading...

ரத்த வாந்தியை கட்டுப்படுத்தும் திருநீர்பச்சைமூலிகை வகைகளில் ஒன்றான திருநீர்பச்சையின் விதைகள், மலர்கள் இலைகள், வேர் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை.


மருத்துவ பயன்கள்

மணமிக்க இலைகள் கக்குவான் இருமலுக்கு பயன்படும். சாற்றினை மூக்கினுள் செலுத்த சளி கட்டுப்படும்.

படர்தாமரை நோயை குணப்படுத்தும். தேனுடன் கலந்து சூடாக்கப்பட்ட சாறு சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்தாகும்.

மலர்கள் அஜீரணத்தைப் போக்கும் தன்மை கொண்டது. சிறுநீர்க் கடுப்பை, நீக்கும்.

வேரானது காய்ச்சலை தணிக்கும், குழந்தைகளுக்கு மலச்சிக்கலை குணப்படுத்தும். பூச்சிகளை அகற்றி , ஜுரத்தை குறைக்கும் கிருமி நாசினியாகும்.

நஞ்சுக்கு மாற்று மருந்தாகும். மணமிக்கது. சிறுநீர்க்கடுப்பை போக்கும். கபத்தை வெளிக்கொணர உதவுகிறது.

சிறுநீரக கோளாறு, வயிற்றுப்போக்கு, வலி, புண்கள், போன்றவற்றிற்கு பயன்படும், காயங்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

சகல விதமான வாந்திகளுக்கும் இது நல்ல மருந்து. குறிப்பாக ரத்த வாந்திக்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகையாகும்.

இந்தப் பச்சிலையின் சாறெடுத்து சுடுநீரில் கலந்தோ அல்லது கஷாயம் செய்து கொடுக்க வாந்தி கட்டுப்படும்.

முகத்தில் விஷப் பருக்கள் தோன்றினால் அதற்கு திருநீற்றுப் பச்சிலையைக் கசக்கி சாறெடுத்து அந்தச் சாற்றோடு வசம்பு வைத்து நன்கு அரைத்து விஷப் பருக்கள் மீது மூன்று வேலை தடவினால் பரு காய்ந்து கொட்டிவிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply