மொறுமொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ்

Loading...

மொறுமொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ்
தேவையான பொருட்கள்:
பன்னீர் – 1 பாக்கெட் (நீள துண்டுகளாக்கிக் கொள்ளவும்) மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன் மைதா – 2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன் பிரட் தூள் – 1 கப் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் மற்றொரு பௌலில் சோள மாவு, மைதா, உப்பு, மிளகுத் தூள், மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீர் துண்டுகளை மைதா கலவையில் பிரட்டி, பின் பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ் ரெடி!!!

Loading...
Rates : 0
Loading...
VTST BN