மெசஞ்சர் அப்ளிகேஷனில் தீங்கு இல்லை பேஸ்புக் அறிவிப்பு

Loading...

மெசஞ்சர் அப்ளிகேஷனில் தீங்கு இல்லை; பேஸ்புக் அறிவிப்புபேஸ்புக் மொபைல் சாதனங்களில் தன் மெசஞ்சர் பயன்பாட்டினை, அதன் பேஸ்புக் சமுதாய தளத்திலிருந்து பிரித்து எடுத்து, தனியே அமைத்துப் பயன்படுத்தத் தந்தது. அனைத்து வாடிக்கையாளர்களும் இதனைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கியது. ஆனால், இது குறித்து பல வதந்திகள் வெளியாகின.

பேஸ்புக் நம் மொபைல் போன் பயன்பாடு குறித்த அனைத்து தகவல்களையும் திருடுகிறது. மெசஞ்சர் அப்ளிகேஷனைப் பதியும்போது, தரப்படும் அனுமதிகள் மூலம் இந்த திருட்டு ஏற்பாடு நடக்கிறது என்று பலவிதமான தகவல்கள் இணையத்தில் வெளியாகின.

இந்த வதந்திகள் பல நாடுகளில் பரவியதால், பலர், இந்த மெசஞ்சர் அப்ளிகேஷனையே தங்கள் மொபைல் சாதனங்களில் இருந்து நீக்கினர். இன்ஸ்டண்ட் மெசஞ்சர் பயன்பாட்டிற்கு டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தி பழைய முறையிலேயே கையாண்டனர்.

இதனை அறிந்த பேஸ்புக் தற்போது அறிவிப்பு ஒன்று மூலம், இந்த தவறான வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. பேஸ்புக் மெசஞ்சர் அப்ளிகேஷனை வடிவமைத்த குழுவில் உள்ள பொறியியல் வல்லுநர் பீட்டர், மெசஞ்சர் புரோகிராமால், போனில் மேற்கொள்ளப்படும் பேச்சுக்களை கேட்க முடியாது.

போனில் உள்ள் கேமரா அல்லது மைக்ரோபோனை பயன்படுத்த முடியாது. வாடிக்கையாளர்கள் குரல் வழி தங்கள் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதனை எளிதாக்கவே, போனில் உள்ள மைக் மற்றும் கேமரா குறித்து கேட்கப்படுகிறது என்று தெளிவு படுத்தியுள்ளார்.

வாடிக்கையாளர்களின் அனுமதி பெறுவது என்பது, எந்த ஒரு அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யப்படும் போதும், வழக்கமான நடைமுறைதான்.

வாடிக்கையாளர்கள் மெசஞ்சரைப் பயன்படுத்தாத போதும், மெசஞ்சரைப் பயன்படுத்துகையிலும், தேவைப்படாத போதும், மெசஞ்சர் தானாக அவற்றைப் பயன்படுத்த இயலாது.

பேஸ்புக் இணைய தளத்திலிருந்து இந்த வசதியைப் பிரித்து தனி அப்ளிகேஷனாகக் கொடுத்ததற்கு, தகவல் பரிமாற்ற வசதியை எளிதாகவும் விரைவாகவும் மேற்கொள்ளும் வசதியைத் தருவதற்காகவே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்பைக் காட்டிலும், மெசஞ்சர் மூலம் 20% அதிக வேகத்தில் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த விளக்கம் உண்மை நிலையை மக்கள் அறிவதற்காகத் தரப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply