மூக்கில் இருந்து தீடிரென்று ரத்தம் வருகிறதா

Loading...

மூக்கில் இருந்து தீடிரென்று ரத்தம் வருகிறதாஅடிபடாமல், காயமில்லாமல் சிலருக்கு மூக்கில் இருந்து தீடிரென்று இரத்தம் கொட்டும். உண்மையில் மூக்கு ஒரு மென்மையான அவயம். மூக்கை இரு பாகமாக பிரிக்கும் சுவரின் கீழ் பகுதியில் நுண்ணிய இரத்தக் குழாய்கள் தந்துகிகள் சந்திக்கின்றன. இவைகள் சுலபமாக உடையும் குழாய்கள். சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் உடைந்து இரத்தம் வர ஆரம்பித்து விடும்.


அதற்கான காரணங்கள் :

மூக்கை நோண்டுவது, விபத்து, மூக்கில் அடிபடுவது.

குளிர்காலத்தில் உலர்ந்த சூடான காற்றை அதிக நேரம் சுவாசிக்க நேர்ந்தால் இரத்தப்போக்கு ஏற்படலாம்.

ஆஸ்பிரின் போன்ற இரத்த மிளக்கிகள் காரணமாகலாம்.

பலமாக மூக்கை சிந்துவது, மூக்கில்கட்டி, சைனஸ், ஷயரோகம், பால்வினை நோய்கள், தொழு நோய் இவை காரணமாகவும் இரத்தம் வரும்.

மண்டையில் ஏற்படும் பாதிப்புகள், தொண்டை புண்கள் இவற்றால் ஏற்படும் உதிரப்போக்கு மூக்கு வழியே வடியும்.

மூக்கின் ஈர ஜவ்வுப்பகுதிகள் உலர்ந்து போனால் இரத்தம் வரும். குளிர்காலத்தில் இம்மாதிரி மூக்கில் இரத்தம் வருவது அதிகம்.

மூக்கில் இரத்தம் கொட்டும்போது பார்க்க பயமாகத்தான் இருக்கும். மூக்கின் முன் பகுதியிலிருந்து இரத்தம் வருவது அவ்வளவு ஆபத்தில்லை. ஆனால் மூக்கின் பின்புறத்திலிருந்து வந்தால் ஆபத்துதான். எனவே மூக்கில் இரத்தம் வழிந்தால் டாக்டரிடம் உடனே செல்வது நல்லது. உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ள வர்களுக்கு மூக்கில் இரத்தம் வந்தால், நிறுத்துவது கடினம். இவர்கள் தங்களின் நோய்க்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் இரத்தக்கசிவை உண்டாக்கலாம்.

அதே போல மூட்டுவலிக் காரர்கள் சாப்பிடும் சில மருந்துகளும் மூக்கில் ரத்தம் வடிவதை உண்டாக்கும்.

மூக்கிலிருந்து இரத்தம் கொட்டும் போது சிறிதளவாவது அந்த ரத்தத்தை முழுங்கி விடுவதை தவிர்ப்பது கடினம். முழுங்கப்பட்ட ரத்தம் வயிற்றில் எரிச்சலை உண்டாக்கி, வாந்தி எடுக்கச் செய்யும்.


இதற்கான சிகிச்சை :

மூக்கை இரு பக்கமும் அழுத்தி 5 லிரு ந்து 10 நிமிடம் வரை பிடித்துக் கொள்ளவும். மூக்கை பிடித்தால் வாய் வழி யே இரத்தம் வரலாம். அதைக் கண்டு பயப்பட வேண்டாம். வாய் ரத்தத்தை வெளியே துப்பவும்.

நிற்காமல் இரத்தம் கொட்டும் ஹீமோஃபிலியா வியாதி உள்ளவர்களுக்கு இரத்தத்தை நிறுத்துவது கடினம். இவர்கள் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும்.

இரத்தம் வரும் இடத்தை மின்சாரத்தால் லேசாக தீய்த்து விடுவது முக்கிய சிகிச்சை இதை காஸ்டர்நேசன் என்பார்கள்.

ஆயுர்வேதம் சோதனா உடலை சுத்தீகரிப்பது மற்றும் சாமனா நாஸ்யம் மூக்கில் மருந்து விடுதல் சிகிச்சை முறைகளை கையாளும்.

சோதனா சிகிச்சையில் விரேசனா சிகிச்சையும் உண்டு.

இவற்றால் உடலின் கழிவுகள் நச்சுக்கள் வெளியேற்றப்படும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply